இதுவும் கடந்து போகும்

 

                                                           இது நான் சின்ன வயசுல ரேடியோல கேட்ட கதை ,
தென்க்கட்சி  கோ  சுவாமினாதன் ஐயா சொன்ன கதை  வாங்க நாமும் கதைக்குள்ள போகலாம் ...




                                  

                                         ஒரு நாட்டுல ஒரு ராஜா இருந்தாராம் அவரு ஒரு விலை உயர்ந்த மோதிரத்த செய்ய சொன்னாராம் அதுக்கு உள்ள ஒரு பொன் மொழி எழுதி வைக்கனும் . அதுக்கு என்ன வாசகம் எழுதலாம்ன்னு ஆலோசிக்க அரசபையை கூட்டினார் எல்லா அறிஞர் பெருமக்களும் அவங்க கருத்துக்களை தெரிவிச்சாங்க அப்போது ஒரு வயது முதிர்ந்த அறிஞர் தனது அனுபவத்தின் மூலம் ஒரு வாசகத்தை  சொல்லுரனு சொன்னாரு  ஆனால் அதுக்கு ஒரு நிபந்தனை அத நீங்கள் உங்க அவசர காலத்துல மட்டும் தான் திறந்து பார்கனும் அப்புடினாரு  அதுக்கு மன்னரும் ஒத்துக்கிட்டாரு .

                                                 மன்னர் அந்த அறிஞர்  அனுபவத்துல  அதீத நம்பிக்கையும் , மதிப்பும் வச்சுருக்காரு மன்னர். அதுப்படி அந்த அறிஞறும் ஒரு வாசகத்த அந்த மோதிரத்துக்குள்ள அவர் கைப்பட எழுதி வைத்தார்  நாட்களு வேகமா போச்சு . ஒருநாள் அரன்மனைக்கு அரசரோட ஒற்றன் ஒரு செய்தியோட வந்தான்   இன்னும் இரு திங்களில் அதாவது இன்னும் ரெண்டு மாதத்துக்குள்ள எதிரி நாட்டு மன்னன் நமது  நாட்டின் மீது போர் தொடுத்து வர உள்ளதாக ஒரு திங்கள் முன்  அதாவது ஒரு மாதத்துக்கும் முன் எனக்கு தகவல் வந்தது என்னு ஒற்றன் மன்னனிடம் பணிவுடன் கூறினான் . செய்தி தாமதமாக கிடைத்ததை எண்ணி மன்னர் அஞ்சாமல் போருக்கு வீரர்களின் படையை தயார் செய்ய சொன்னார் தளபதியிடம்.




                                       
மன்னர் சொன்னது போல போரில் அணைத்து வீரர்களும் தங்களால்  முடிந்த அளவிற்கு பாோிட்டனர் இருந்தாளும் எதிரி நாட்டின் படை வலிமையால் போரில் இறுதியில் எதிரி மன்னரினால்  நம் மன்னரின் படை  சிதரடிக்கப்பட்டது  அவரும் படுபாயம் அடைந்து ஒரு குகையில் ஓரத்தினை அடைந்தார் அது அந்த நாளின் போருக்கு பின்தைய நேரம் ஆகும்அப்போது தான் அவருக்கு மோதிரம் நிணைவிற்க்கு வந்தது அதனை திறந்து பார்த்தார் அதில் உள்ள வாசகம் மன்னருக்கு ஒரு புதிய தைரியத்தினை அளித்தது. உடனே  ஒற்றனை தனது நட்பு நாடுகளுக்கு தூது அனுப்பி தன்  படைக்கு  வலிமை அளித்தார் போரிலும் வென்றார் .

                                    
                                                வெற்றி அடைந்த பின் தன் நாடு திரும்பினார் மன்னர் அரசபையில் போரின் போது  கைபற்றபட்ட  செல்வங்கள், விலை மதிப்பில்லா ரத்தினங்கள் , வைர வைடுரியங்களை கண்டு தன்  நிலை மறந்து வீர வாள் கீழே விழுவது கூட தெரியாத அளவிற்க்கு களிப்புற்றான் மன்னன் அப்போது அவனிடம்  இருந்த மோதிரம் கீழே விழுந்து உருண்டு ஒடியது  திறந்ததை கண்டான் அதனை எடுத்து அதில் இருந்த வாசகத்தினை படித்தான் முகத்தில் இருந்த கர்வம்  திடிரென மறைந்தது . அரசபையில் இருந்த அணைவரும் ஒரு நிமிடம் மன்னரை உற்று நோக்கினர்  அப்போது  மன்னர் உறக்க அந்த வாசகத்தினை படித்தார் " இதுவும் கடந்து போகும்" என்பது தான் அந்த வாசகம்.




                                   
இதை ஏன் இப்போ சொல்லுரேனு பாக்குறீங்கலா நம்ம நியூட் ஓட  வாழ்கையிலயும் இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சுங்க . அப்போ அவ பைனல் செமஸ்டர் படிச்சுகிட்டு இருந்தா அப்போ அவளுக்கு ஒரு பரிசு கிடைக்க போர நேரம் சந்தர்ப்ப சூழ்நிலையால   அவளால அந்த பரிச மேடையில போய் எல்லார் முன்னிலையிலும் பெருமையா வாங்க முடியல. அந்த சூழ்நிலையில யார குற்றம் செல்லன்னூனு அவளுக்கு தெரியல  ரொம்ப கஸ்டப்பட்டா  . அதுக்கு அப்புறம் அலுவலகத்துல போய் அந்த பரிச  வாங்கிட்டு வந்தா.அந்த நேரத்துல அவ நட்பு  அவகிட்ட சொன்னது " இதுவும் கடந்து போகும்" . 
                                   
சொன்ன மாறி அவ அத மறந்துட்டா அதுகாக எந்த முயற்ச்சியும் எடுக்காம  இல்லை நிறைய போட்டிகள்ள கலந்து கிட்ட ஒரு நாள் யாரால அந்த பரிசு அவளுக்கு கிடைக்காம போனதோ அவங்க கூட அவள பாராட்டுற அளவுக்கு ஒரு செயல செஞ்சா  அப்போ ஒரு சந்தோசம் அவ கண்ண  மறைச்சுது சொல்லி வைச்ச மாறி அந்த பாராட்டு மரையுரது குல்ல ஒரு வருத்தமும் அவ வாழ்கையில் வந்துச்சு அது வேற ஒன்னும் இல்லைங்க இந்த கரோனா தான் அவ காலேசு டூர்  தடைப்பட்டது , அவ கிரஜீவேஷன் செரிமோனியும் தள்ளி வச்சுடாங்க  அப்போதும் அவ மனசுல் ஒரு குரல் கேட்டது இதுவும் கடந்து போகும்....



                                
நம்ம வாழ்கையில எது நடந்தாலும் நம்மையோ இல்ல  மத்தவங்கலையோ குறை சொல்லாம நடந்தத ஏத்துகிட்டு அதை எப்புடி நமக்கு சாதகமா திருப்புரோம்னு இருக்குரதுலதான்  இருக்கு ஒரு புது வாழ்க்க ... 

என்னடா இவன் இப்ப ஒரே தத்துவமா பேசி கொல்லுரானு பாக்குரிங்கலா ஏன்னா  இதுவம் கடந்து போகும்... 

 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

first blog