கனவு

 

     வணக்கம் நான் சன் எவின்
                    இன்னக்கி நம்ம பாக்க போற கதை கனவு ... இந்த உலகத்தில் கனவு இல்லாதவங்க யாராது இருக்காங்களா எல்லாருக்கும் கனவுகள் உண்டு.



 

                                                        என்னதான் இராத்திரி நல்லா தூங்கினாலும் அந்த விடியகாலைல வர கனவுக்காக இன்னும் கொஞ்சம் அதிகமா தூங்க தோனு . அப்போ வர அந்த கனவுகளாம் கலையுரது யாருக்கும் பிடிக்காது , அதுவே நிஜத்துல நடந்தா எவ்ளோ நல்லாருக்கும்னு நம்மல்ல பலருக்கும் தோனுரது உண்டு .

                                                          அப்புடி ஒரு கனவுதான் நம்ம நியூட்க்கும் வந்துச்சு அப்போ அம்மா  எழுப்புராங்க கனவு முழுசா முடியுரதுக்குல்ல எஞ்சுட்டா . சரி வாங்க அந்த கனவுக்குல்ல போகலாம் .


 


                                                        அது ஒரு செமஸ்டர் லீவ்டெஸ் அதுனால நியூட்க்கு வேலை அதிகம் காலைல எந்திரிச்சு குட்டி கூட விளையாடிட்டு அப்புடியே சோஃபா மல்லாக்க படுத்து விட்டத்த பாதபடி புத்தகத்த புரட்டீட்டு (பின்குறிப்பு நான் புத்தகம்னு சொன்னது வார இதழ், "ஏன்டா கதையா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடனு நீங்க உங்க மைன்டு வாஸ்ல கேக்குறது எனக்கு கேக்குது) அப்புடியே ஒரு சூடான காபி குடிச்சுட்டு நம்ம நியூட் அவளுக்கு வந்த கனவ அவ பிரன்ஸ் ஹனிகிட்ட முதல இருந்து சொல்லுரா.

                                                        நேத்தி எனக்கு ஒரு வித்தியாசமான கனவு வந்துச்சு ஹனி அப்படினு மெல்ல கனவ சொல்ல ஆரம்பிக்குரா ...

 

                                                        நல்லா சாப்ட்டு நைட்டு ஒரு 10 மணி போல தூங்க போயிட்டன் டா அப்போ ஒரு கனவு நான் ஒரு பஸ்ல போறேன் அது ஒரு ஸ்பிரிங் சீசன் அதான்பா இலை உதிர்காலம் , நான் சாதரணமா போல இந்த மலை ஏற போவங்கல அவங்கல மாறி டிரஸ் பன்னிறுக்கேன் பெரிய பேக் டென்டு செட்டிங்கு, மில்ட்டரி காஸ்டியும்ல கேப் , கழுத்துல கேமரா அதோட நியூட் ரோம்ப நாளா போகனும் நினச்ச ஹில் ஸ்டேஷன் டிரிப்கு போரா .



                            
                                                        அது மட்டும் இல்லாம அவ கூட அவள மாரியே டிரஸ் பன்னிட்டு ஒரு பையனும் வரான் அவன்கிட்ட நம்ம நியூட் ஒட டிரைபாட்க்காண கீர்ஸ் இருக்கு அவளுக்கு ஒன்னும் புரில. வின்டோ சீட்ல உக்காந்திருந்த அந்த கேரக்டர் ஒட முகமும் சன்லைட்ல சரியா தெரியல . வின்டோ சீட்ல உக்காந்திருந்த அந்த கேரக்டர் பாத்ததுல நம்ம நியூட்க்கு ஒரே ஆச்சரியம் ! ஏன்னா எப்போமே அவள தவிர விண்டோ சீட்ல யாரையும் நியூட் உக்காரவிடமாட்ட அது அவளோட சின்ன வயசுலருந்து இருக்குர மேனரிசம்.

                                                       அப்போ பஸ் இன்ஞின் சூடானதுனால ஒரு இடத்துல நிக்குது நியூட்க்கு கொஞ்சம் கூட பரிச்சியம் இல்லாத அந்த கேரட்டர் அவள டீக்குடிக்க கீழ அழைச்சுட்டு போகுரான் குழப்பத்தோட அவளும் இறங்குறா . அப்புடியே பக்கத்துல ஒரு சின்ன வியூப்பான்ட் இருக்கு அங்க போய் பாக்கலாம் வானு நியூட்ட கூட்டிட்டு வேகமா போரான் அந்த கேரக்டர்...




                                                        அங்க கொஞ்ச நேரம் சுத்தி பாத்துட்டு தன்னோட மொபைல்ல நியூட் செல்ஃபிஎடுக்குறா . டக்குனு அந்த கேரக்டர் அவனோட செல்ஃபி ஸ்டிக்க எக்ஃஸ்பேன்ட் பன்னி நியூட் கூட செல்ஃபி எடுக்குரான் அப்போ... திடீர்னு ஒரு சத்தம் சர்பிரைஸ் அப்புடினு பின்னாடி ஒன்னாஒரே குரல்ல கத்துராங்க .

                                                        அவ முகத்துல ஒரு பிலாஷ் அடிக்குது , அவளுக்கு ஒன்னுமே புரியல அங்க வந்து அவளோட பிரன்ஸ் ஹனி, குறுட், மசாவு, பியர்ஸ், இன்னும் நிறைய பேர் இருந்தாங்க . அப்போ அம்மா திடீருனு நியூட்ட எழுபிட்டாங்க கனவும் கலஞ்சி போச்சி .



                                                        என்னதான் தூக்கத்துல இருந்து எழுந்தாலும் நியூட்க்கு எப்புடி அவளோட பிரன்ஸ் அங்க வந்தாங்க அவளுக்கு தெரியாத அந்த வின்டோ சீட் கேரக்டர எப்புடி அவளோட பிரன்ஸ்க்கு தெரிஞ்சுருக்கு யோசிச்சிட்டே இருந்தா ...

                                                        இந்த கனவ அவளோட கனவுல வந்த பிரன்ஸ் எல்லார்டயும் சொன்னா யாருக்குமே அந்த வின்டோ சீட் கேரக்டர யாருனு தெரில ...

                                                    கடைசில நியூட்டொஅந்த கனவ பத்தி யோசிக்கிறத விட்டுட்டா . இருந்தாலும் இது கனவா இல்லாம நிஜத்துல நடந்தா நியூட் அந்த விண்டோ சீட் கேரக்டர் யாருனு கண்டுபிடிப்பாளா ?... 



Comments

Post a Comment

Popular posts from this blog

first blog